Saturday, April 16, 2022

 

தாய் மண் பிரிவும் புலம் பெயர் வாழ்வும்

 

சாண்டில்யன்  (அராலியூர் கந்தர் பாலநாதன்)

 

தாய் மண்ணில் அவதரித்தோம்,

மழலை பேசி பெற்றோருடன்

இடியப்பம், புட்டுண்டு மகிழ்ந்தோம்,

வயல் வெளியில் பாடித்திரிந்தோம்,

கல்லூரியில் நல்வழிகளைப் பயின்றோம்,

பல்கலைக்கழகம் சென்றோம்,

தொழிலில் இணைந்தோம்,

இந்நிலையில் பண வாசனை

எம் மூளையை தழுவ,

பணம் கொள்ள புலம் பெயர்ந்தோம்,

சிலர் குழந்தைகள் கல்விக்கென

புலம் பெயர்ந்தோம்,

பண வாசனை தழுவிய பெற்றோர்

புலம் பெயர் வாழ்வில்

பணக் கொத்துக்களை கொண்டனர்,

குழந்தைகள் பெற்றனர்

கல்வியெனும் செல்வம்,

குழந்தைகள் தொழிலில் ஈடுபட

பிறந்ததே காதலெனும் பித்த வாசனை,

எம்வாயில் வந்ததோ

கந்தா, கடம்பா, கதிர்வேலா கவிதை,

குழந்தைகள் திருமண வாழ்க்கையோ

மாற்று இனத்தில்,

தாய் மண்ணில் பிறந்த எம்

முதுமையில் பிறந்த வாசனை

தனிமை எனும் மன அழுத்தம்,

வாழ்க்கையோ முதுமை வீடுகளில்,

தமிழினமோ காற்றில் கரைந்தது,

புலம்பெயர் வாழ்வில்

உளறுவது தமிழினம் என,

ஒரு இரு நூற்றாண்டில்

எம் தலைமுறைகளை

எவ்வினம் என அழைப்போம்,

சிந்திப்போம் செயல்படுவோம்

குழந்தைகளே!


No comments:

Post a Comment

  To:   Rajapaksa Clan                                                                                                                      ...